'ஆற்றல்' மீது புகார் போலீஸ் விசாரணை
'ஆற்றல்' மீது புகார் போலீஸ் விசாரணை
'ஆற்றல்' மீது புகார் போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 06, 2025 06:08 AM

கோவை: ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக்குமார்; கடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இவர், 2006ம் ஆண்டு முதல் கோவை, தி இந்தியன் பப்ளிக் பள்ளி நிர்வாக இயக்குநராக இருந்தார்.
இந்நிலையில், அவர் பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக, கடந்த மார்ச் 24ம் தேதி, பள்ளி நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், பள்ளி ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அசோக்குமார் போலியான ஆவணங்களை தயாரித்து, பள்ளிக்கு 45 பஸ்கள் வாங்க, வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் பெற்றது தெரியவந்தது.
தி இந்தியன் பப்ளிக் பள்ளியின் புதிய நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற சிவசங்கரன், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அசோக்குமார் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.