போலந்து ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
போலந்து ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
போலந்து ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
ADDED : மே 20, 2025 10:29 PM

திருப்பூர்:இந்திய ஏற்றுமதியாளர்கள், போலந்தில் நடைபெற உள்ள சர்வதேச பேஷன் கண்காட்சியில் பங்கேற்று, புதிய வர்த்தக வாய்ப்புகளை ஈர்க்கலாம் என, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
ஐரோப்பிய யூனியனுடன், இந்தியாவின் வர்த்தக தொடர்பு வலுவாக இருந்தாலும், அதிக மக்கள்தொகை கொண்ட போலந்துக்கான, ஆயத்த ஆடை ஏற்றுமதியில், இந்தியா 10வது இடத்தில் தான் இருக்கிறது.
சீனா, 23.60 சதவீத பங்களிப்புடன் முதலிடத்திலும், வங்கதேசம், 22.90 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா, 3.80 சதவீத பங்களிப்பு கொண்டுள்ளது.
போலந்தில் உள்ள, லோட்ஜ் நகர் வர்த்தக கண்காட்சி அரங்கில், ஆக., 26ல் துவங்கி, 28ம் தேதி வரை, சர்வதேச ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 2024ல், 1.36 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆயத்த ஆடையை, போலந்து இறக்குமதி செய்துள்ளது. அந்நாட்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஆண்டில் 5,164 கோடி ரூபாயாக உள்ளது.
ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதால், வரும் ஆக., மாதம் 26 முதல், 28ம் தேதி வரை நடக்கும், சர்வதேச பேஷன் கண்காட்சியில் பங்கேற்று, ஏற்றுமதியாளர்கள் புதிய வாய்ப்புகளை ஈர்க்கலாம்
இவ்வாறு கூறினர்.
போலந்து மொத்த ஆடை இறக்குமதி
2024 ரூ.1.36 லட்சம் கோடி
இந்திய ஆடை ஏற்றுமதி
2020 ரூ.2,918 கோடி 2022 ரூ.4,225 கோடி2024 ரூ.5,164 கோடி
ஏற்றுமதியில் பங்கு
சீனா 23.60%
வங்கதேசம் 22.90%
இந்தியா 3.80%