ADDED : ஜூன் 06, 2025 06:06 AM
பா.ம.க., உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், நடுவராக சென்றிருப்பவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ம.க.,வின் தொடக்க காலத்தில், இடதுசாரி சிந்தனையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வளர்ந்தது. ஆனால், வலதுசாரி அரசியலுக்கு பா.ம.க., போய்விட்டது என்பதை உணர்த்தும் வகையில், பஞ்சாயத்தார்களின் முயற்சி வெளிப்படுகிறது.
இடதுசாரி அரசியலால் எழுச்சி பெற்றபோதிலும், தற்போது அக்கட்சி வலதுசாரி இயக்கமாக மாறி விட்டது. இது தமிழக மக்களுக்கு வெளிச்சமாகி உள்ளது.
படிக்கும் பிள்ளைகளை ஊக்கப்படுத்தும் வகையில், த.வெ.க., தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்குவது வரவேற்கத்தக்கது.
- திருமாவளவன்,
வி.சி., கட்சி தலைவர்.