ADDED : ஜூன் 22, 2025 03:33 AM

கோவையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியதாவது:
கீழடி அகழாய்வில் அ.தி.மு.க., அரசு எப்படி மேற்கொண்டது என்ற விளக்கத்தை தெரிவித்துவிட்டோம்.
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு என் வாழ்த்துகள். மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலம் குறித்து அவரது கருத்தை கூறியுள்ளார். தாய்மொழிக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விட, ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற அர்த்தத்தில் அவர் பேசியுள்ளார்.
தி.மு.க.,வினர் பொதுவெளியில் மிகவும் ஆபாசமாக பேசுவது அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தி.மு.க., ஆட்சி மீது, மக்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதை மடைமாற்றம் செய்யவே, கேலிச்சித்திரங்களை வெளியிட்டு, அவதுாறு கருத்துகளை பரப்புகின்றனர். 2026 சட்டசபை தேர்தலில்; மக்கள் தக்க தண்டனை வழங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.


