சபாநாயகர் தொகுதியில் குடிநீருக்காக காலிகுடங்களுடன் மக்கள் மறியல்
சபாநாயகர் தொகுதியில் குடிநீருக்காக காலிகுடங்களுடன் மக்கள் மறியல்
சபாநாயகர் தொகுதியில் குடிநீருக்காக காலிகுடங்களுடன் மக்கள் மறியல்
ADDED : ஜூன் 11, 2025 02:24 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் போதிய குடிநீர் சப்ளையில்லாததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இத்தொகுதிக்குட்பட்ட ஆனைகுளம் கிராம ஊராட்சியில் போதிய குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் இருந்து ரூ. 605 கோடியில் தொகுதி முழுதும் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.
இதனால் ஆனைகுளம் கிராம மக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினர்.
ஏற்கனவே வள்ளியூர் அருகே கோட்டையடி கிராம மக்கள் சில நாட்களுக்கு முன் சபாநாயகர் அப்பாவுவை வள்ளியூரில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.