பட்டா மாறுதல் சேவை திடீர் முடக்கம்
பட்டா மாறுதல் சேவை திடீர் முடக்கம்
பட்டா மாறுதல் சேவை திடீர் முடக்கம்
ADDED : செப் 11, 2025 01:52 AM
சென்னை:'இ - சேவை' மையங்கள் வாயிலாக, பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் வசதி, முடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை சொத்து வாங்குவோர், அதற்கான பட்டாவில், பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, 'இ - சேவை' மையங்கள் வாயிலாக, பொது மக்கள் பதிவு செய்யலாம்.
இவ்வாறு பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது நில அளவையாளருக்கு அனுப்பப்படும்.
இதில், கடந்த மாதம் தொடர்ந்து சில நாட்கள், 'இ -சேவை' இணையதளத்தில், பட்டா மாறுதல் விண்ணப்ப பதிவு முடங்கியது.
பொது மக்கள் புகார் தெரிவித்த நிலையில், தொழில்நுட்ப குறைபாடு சரி செய்யப்பட்டது. தற்போது மீண்டும், இதில் பிரச்னை ஏற்பட்டு முடங்கியுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், பட்டா மாறுதல் தொடர்பான மனுக்கள் அதிகம் வருவதால், அவை 'ஆன்லைன்' முறையில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக, 'இ- சேவை' மையங்களில் பதிவேற்ற வசதி நிறுத்தப்பட்டுள்ளதா என, சந்தேகம் எழுந்துள்ளது.