பயணியர் நிழற்குடை மீண்டும் அமைப்பு
பயணியர் நிழற்குடை மீண்டும் அமைப்பு
பயணியர் நிழற்குடை மீண்டும் அமைப்பு
ADDED : ஜூன் 26, 2025 11:18 AM

ராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் அருணாச்சலம் சாலை உள்ளது. இச்சாலையில், கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்வாய் பணி மேற்கொள்ளப்பட்டபோது, சிந்தாதிரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை அகற்றப்பட்டது.
வடிகால்வாய் பணி முடிந்தும், மீண்டும் நிழற்குடை அமைப்பதற்கான நடவடிக்கையை, மாநகராட்சியினர் மேற்கொள்ளவில்லை. இதனால் வெயிலிலும், மழையிலும் நின்று, பயணியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து, அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் நிழற்குடையை, மாநகராட்சி ஊழியர்கள் அமைத்துள்ளனர்.