Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அ.தி.மு.க.,வில் இருந்தபடியே துரோகம் செய்தவர் செங்கோட்டையன் மீது பழனிசாமி கடும் குற்றச்சாட்டு

 அ.தி.மு.க.,வில் இருந்தபடியே துரோகம் செய்தவர் செங்கோட்டையன் மீது பழனிசாமி கடும் குற்றச்சாட்டு

 அ.தி.மு.க.,வில் இருந்தபடியே துரோகம் செய்தவர் செங்கோட்டையன் மீது பழனிசாமி கடும் குற்றச்சாட்டு

 அ.தி.மு.க.,வில் இருந்தபடியே துரோகம் செய்தவர் செங்கோட்டையன் மீது பழனிசாமி கடும் குற்றச்சாட்டு

ADDED : டிச 01, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
கோபி: 'அ.தி.மு.க.,வில் இருந்தபடியே, கட்சிக்கு துரோகம் விளைவித்தவர் ' என, செங்கோட்டையனை அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்த நிலையில், அவரது சொந்த தொகுதியான கோபியில் பொதுக்கூட்டம் நடத்தி, தன் பலத்தை காட்ட, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவு செய்தார். அதன்படி, கோபியில், நேற்று அ.தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது.

நிச்சயம் நடக்கும் அதில் பங்கேற்ற பழனிசாமி பேசியதாவது:

மக்கள் ஆரவாரத்தின் வாயிலாக, வரும் தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. யார் யாரோ கண்ட கனவை நொறுக்கி விட்டீர்கள். வரும் சட்டசபை தேர்தலில், கோபி தொகுதியில், பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெல்லும்.

இத்தொகுதியில் ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஓட்டு வாங்க உங்களிடம் வந்த அவர், ராஜினாமா செய்வதற்கு உங்களிடம் கேட்டாரா? அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்பவர்களை ஆண்டவன் பார்த்துக்கொள்வான். கட்சி ஒருங்கிணைப்பை நானே முன்னெடுப்பேன் என கெடு விதித்தவரை எப்படி கட்சியில் வைத்துக் கொள்ள முடியும்?

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இல்லாததால், அ.தி.மு.க., சார்பிலான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று சொன்ன அவர், இப்போது, யார் படத்தை வைத்துக் கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தார்?

இதே கோபியில், அரசு பள்ளி நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இல்லாமல், கருணாநிதி, ஸ்டாலின் படம் இருந்த நிலையில், அவர் பங்கேற்றார்.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டே, கட்சிக்கு துரோகம் விளைவித்தார்.

எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே அ.தி.மு.க.,வுக்கு சோதனைகள் தான். அவற்றை எல்லாம் வென்று எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவருக்கு பின், ஜெயலலிதாவும் பல சோதனைகளை வென்று முதல்வரானார்.

அதுபோல இப்போது வரும் சோதனையை வென்று, வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும். அறுதி பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்; கோபியில் வெற்றி விழா கொண்டாடுவோம். இது நிச்சயம் நடக்கும்.

தமிழகத்தை ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என நான்கு பேர் ஆட்டிப்படைக்கின்றனர். ஒரு டி.ஜி.பி.,யை கூட நியமிக்க முடியாத இந்த அரசு, எப்படி சட்டம் - ஒழுங்கை காப்பாற்றும்?

டாஸ்மாக்கில் பாட்டி லுக்கு 10 ரூபாய் வசூலித்து , கடந்த 4 ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் தி.மு.க., தலைமைக்கு போயிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போய் விடுவர்.

தாலிக்குத் தங்கம் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஏழை விவசாய தொழிலாளி, அருந்ததியர், தாழ்த்தப்பட்ட, மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால், அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். மனை இல்லாதவர்களுக்கு, அரசே மனையை வாங்கி தந்து, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஏற்கனவே நிறுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் தொடரும்; கூடுதலாக மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலையும், மணமகனுக்கு பட்டுவேட்டியும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்டாலினுக்கு நேரடி சவால் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், ''என்னை விவசாயிகளின் பச்சை துரோகி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் அவர்களே.. நான் வருகிறேன், நீங்களும் வாருங்கள். பயிர்களை உங்கள் முன் வைக்கிறேன். ஒவ்வொன்றும் என்ன பயிர் என சொல்லி விடுங்கள் பார்க்கலாம். ஸ்டாலினுக்கு என்ன பயிர் என்றும் தெரியாது; தானியமும் தெரியாது. ''டெல்டாவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின, நான் ஓடோடிச் சென்று பார்வையிட்டேன். முதல்வர் திரைப்படம் பார்க்கச் செல்கிறார். அவருக்கு, அழுகிப்போன பயிர்களை, டிரேயில் வைத்து காட்டுகின்றனர். இந்தியாவிலேயே இப்படிப்பட்ட முதல்வர் யாருமில்லை,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us