மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் பழனிசாமி அறிவிப்பு
மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் பழனிசாமி அறிவிப்பு
மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் பழனிசாமி அறிவிப்பு
ADDED : செப் 11, 2025 03:30 AM
சென்னை:'மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலையை கண்டித்து செப்.22ம் தேதி, சிவங்கை மாவட்டம், மானாமதுரையில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த ஆலை அமைக்கப்பட்டால், சுற்றுச் சூழல் பாதிப்பு, தொற்று நோய், உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், இப்போது இந்த ஆலை கட்டுமானப் பணிகளை வேகப்படுத்தி வருவது, வேதனை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலை, கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த தவறிய, தி.மு.க., அரசையும், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் செப்.22ம் தேதி காலை 10:00 மணிக்கு, மானாமதுரை தாலுகா அலுவலகம் எதிரில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் கட்சியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.