2026 மட்டுமல்ல 2031, 2036லும் நம் ஆட்சி தான்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
2026 மட்டுமல்ல 2031, 2036லும் நம் ஆட்சி தான்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
2026 மட்டுமல்ல 2031, 2036லும் நம் ஆட்சி தான்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

9.69% வளர்ச்சி
தமிழக வரலாற்றில் இல்லாத வகையில், திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
பணவீக்கம்
சமூக முன்னேற்றம், உயர் கல்வி சேர்க்கையில் முதலிடத்திலும், வறுமையில்லா நிலையை உருவாக்குவதில் இரண்டாம் இடத்திலும், நீடித்த வளர்ச்சி, மருத்துவக் குறியீட்டில் மூன்றாமிடத்திலும் தமிழகம் உள்ளது. பணவீக்கம் குறைந்த மாநிலமாகவும், அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் திகழ்கிறது. தலைநகரில் மட்டுமல்லாது அத்தனை பகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செய்ததே இதற்கு அடிப்படை காரணம்.
2031, 2036ம் ஆண்டு..!
மக்களின் வரவேற்பை பார்க்கும் போது, கொஞ்சம் இருமாப்பு உடன், பெருமையுடன் சொல்ல விரும்புவது, 2026ம் ஆண்டு மட்டுமல்ல, 2031, 2036ம் ஆண்டாக இருந்தாலும் என்றைக்கும் நாம் தான் இந்த நாட்டை ஆளப்போகிறோம். கடந்த கால ஆட்சியாளர்களால், சீரழிந்த தமிழகத்தின் வளர்ச்சியை, தி.மு.க., அரசு 4 ஆண்டுகளில் மீட்டெடுத்துள்ளது.
சுற்றுப்பயணம்
தமிழகத்தை வரலாறு காணாத வளர்ச்சிக்கு கொண்டு சென்று இருக்கிறோம். தமிழகத்திற்கு ஓரவஞ்சம் செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. நான் கோட்டையில் இருந்து மட்டும் பணிகளை செய்யவில்லை. மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் சென்று கொண்டு இருக்கிறேன்.