50 கூட்டுறவு வங்கி கிளைகளை ரூ.7 கோடியில் நவீனமாக்க உத்தரவு
50 கூட்டுறவு வங்கி கிளைகளை ரூ.7 கோடியில் நவீனமாக்க உத்தரவு
50 கூட்டுறவு வங்கி கிளைகளை ரூ.7 கோடியில் நவீனமாக்க உத்தரவு
ADDED : ஜூலை 25, 2024 10:27 AM
சென்னை: மக்களை கவரும் வகையில், 50 கூட்டுறவு வங்கிகளின் கிளைகளை, 7.50 கோடி ரூபாயில் நவீனமயமாக்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அவற்றுக்கு, 924 கிளைகள் உள்ளன. இவை, பயிர் கடன், நகை கடன், சிறு வணிக கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடன்களை வழங்கி வருகின்றன.
தேசிய மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்பொலிவுடன் உள்ளன. அதேசமயம், கூட்டுறவு வங்கிகளின் கட்டடங்கள் சேதமடைந்து, காணப்படுகின்றன. எனவே, முதல் கட்டமாக, 50 வங்கி கிளைகளை, 7.50 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.