வெள்ள சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு
வெள்ள சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு
வெள்ள சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு
ADDED : பிப் 11, 2024 12:11 AM
சென்னை:''புயல் மற்றும் மழை காரணமாக, சேதமடைந்த நீர் நிலைகளில், வெள்ள சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்,'' என, நீர்வளத்துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
தலைமை செயலகத்தில், நேற்று நீர்வளத்துறை சார்பில் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், அவர் பேசியதாவது:
நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகள் கட்டுமானம், காவிரி படுகை சிறப்பு துார்வாரும் பணிகள் என, அனைத்து பணிகளையும், எதிர்வரும் பருவ மழைக்கு முன், போர்க்கால அடிப்படையில், முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 'மிக்ஜாம்' புயல் காரணமாகவும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாகவும், நீர்நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதுடன், நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில், வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய, பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நீர்வளத்துறை செயலர் சந்தீப்சக்சேனா, நீர்வள நிலவள திட்ட இயக்குனர் ஜவகர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.