வீண் விளம்பரத்தை தேடுவதில் எதிர்க்கட்சி முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்
வீண் விளம்பரத்தை தேடுவதில் எதிர்க்கட்சி முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்
வீண் விளம்பரத்தை தேடுவதில் எதிர்க்கட்சி முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஜூன் 26, 2024 11:50 AM
ADDED : ஜூன் 26, 2024 10:25 AM

சென்னை: வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே பிரதான எதிர்க்கட்சி முனைப்புடன் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதம் நடத்த கோரி, சட்டசபையில் அ.தி.மு.க.,வினர் அமளியில் ஈடுபட்டனர். நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
வீண் விளம்பரம்
இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. பிரச்னை குறித்து அவையில் பேசாமல் வெளியில் சென்று பேசுவது அவையின் மாண்புக்கு அழகல்ல. வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே பிரதான எதிர்க்கட்சி முனைப்புடன் இருக்கிறது. கள்ளக்குறிச்சி துயர சம்பவத்தில் தமிழக அரசு அக்கறையோடு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின்
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சட்டசபையில் ஸ்டாலின் பேசியதாவது: விதிகளின் படி ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள சில விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. மக்கள் தொகை, ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றை மத்திய அரசே முழுமையாக மேற்கொள்ள முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது. மத்திய அரசு கொரோனா உள்ளிட்ட காரணங்களை காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. சமவாய்ப்பு கிடைக்க கல்வி, சமூகம், பொருளாதாரம் அவசியமாக இருக்கிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.