Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைக்கு வாய்ப்பு

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைக்கு வாய்ப்பு

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைக்கு வாய்ப்பு

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைக்கு வாய்ப்பு

ADDED : ஜூன் 24, 2025 11:44 PM


Google News
சென்னை:'அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், ஜூலை 1 முதல் விண்ணப்பித்து, வரன்முறை செய்து கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 2016 அக்டோபர் 20க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு, எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என, சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி அறிவித்திருந்தார்.

அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், வரும் ஜூலை 1 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

இதுபோல, மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை, வரும் ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரை www.tnhillarealayoutreg.in என்ற தளத்திற்குப் பதிலாக, www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us