Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ADDED : பிப் 05, 2024 09:20 PM


Google News
Latest Tamil News
பிப்ரவரி 6, 1827

தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூரில், 1762 ஏப்ரல் 26ல் பிறந்தவர் வெங்கட சுப்பிரமணிய ஷர்மா எனும் சியாமா சாஸ்திரி.

தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற இவர், தன் மாமனாரிடம் சங்கீதம் கற்றார். சங்கீத சுவாமிகள் என்ற குருவிடம் தாள சாஸ்திர மர்மங்கள், நடை பேத கிரமங்களை கற்றார்.

பின், மாஞ்சி, கல்கட, கர்னாடக, காபி, சிந்தாமணி உள்ளிட்ட அரிய ராகங்களில், மும்மொழிகளிலும், 300க்கும் மேற்பட்ட சங்கதிகளை இயற்றினார். பங்காரு காமாட்சி அம்மனின் பக்தரான இவர், வெள்ளிக்கிழமைகள் மற்றும் விசேஷ நாட்களில், காமாட்சி அம்மன் கோவிலில் அமர்ந்து மனமுருகி பல பாடல்களை பாடினார்.

இவரின் பல தெலுங்கு கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. மீனாட்சி அம்மனை பற்றி, 'நவரத்தின மாலை' எனும் தலைப்பில் ஒன்பது கிருதிகளை பாடிய இவர், 1827ல், தன் 65வது வயதில் இதே நாளில் மறைந்தார். இவரின் நினைவாக, அஞ்சல் துறை, 1985ல் தபால் தலையை வெளியிட்டது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் மூன்றாமவர் மறைந்த தினம் இன்று!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us