சுங்கச்சாவடி கட்டண உயர்வு; ஆம்னி பஸ் ஓனர்கள் எதிர்ப்பு
சுங்கச்சாவடி கட்டண உயர்வு; ஆம்னி பஸ் ஓனர்கள் எதிர்ப்பு
சுங்கச்சாவடி கட்டண உயர்வு; ஆம்னி பஸ் ஓனர்கள் எதிர்ப்பு
ADDED : மார் 26, 2025 06:55 AM

சென்னை: 'தமிழகத்தில் ஏப்ரல், 1 முதல், 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும்' என, ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் வரும், 1ம் தேதி முதல், 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 25 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தும் முடிவு, அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை, மேலும் பாதிக்கும். சுங்கச்சாவடி கட்டண உயர்வு, பொதுமக்களை பாதிக்கும். பொருட்கள் விலை ஏறும்.
எனவே, கட்டண உயர்வை, மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை தவிர்க்க வலியுறுத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில், 12 சுங்கச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதை கருத்தில் வைத்து, கட்டண உயர்வை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் கூறுகையில், ''சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து, வானகரம் சுங்கச்சாவடியில் வரும் 1ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். மாநிலம் முழுதும் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில், முற்றுகை போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.