வி.சி., கொடிக்கம்பம் அகற்ற அதிகாரிகள் ஆர்வம்
வி.சி., கொடிக்கம்பம் அகற்ற அதிகாரிகள் ஆர்வம்
வி.சி., கொடிக்கம்பம் அகற்ற அதிகாரிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 13, 2025 05:19 AM

அரசியல் கட்சிகள் கொடிக்கம்பம் நிறுவுவது, கொடியேற்றுவது இந்தியா முழுதும் உள்ள ஜனநாயக மரபு. யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது என்பது, ஜனநாயக முறையை நசுக்குவதாகும். இதை ஏற்று செயல்படுவது சாத்தியமில்லாதது. அதனால், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதில், நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு சில அதிகாரிகள், வி.சி., கொடிக்கம்பங்களை மட்டும் அகற்றுவதில் முனைப்புடன் இருக்கின்றனர்.
சிதம்பரம் பகுதியில் ஒரு அதிகாரி கொடிக்கம்பத்தை அகற்றும்போது அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி இருக்கிறார். இதை கண்டிக்கிறேன். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமாவளவன், தலைவர், வி.சி.,