அக். 1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கம்
அக். 1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கம்
அக். 1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கம்
ADDED : ஜூலை 28, 2024 04:34 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் நடுவில் துாக்கு பாலத்தை பொருத்திய ரயில்வே பொறியாளர்கள் வானில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
பாம்பன் ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலமிழந்ததால் 2019ல் ரூ.550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது.
இந்நிலையில் 2022 நவ., 23ல் துாக்கு பாலத்தில் உள்ள இரும்பு பிளேட் சேதமடைந்ததால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புதிய பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடந்த நிலையில் 700 டன்னில் உருவாக்கப்பட்ட ஆசியாவின் முதல் லிப்ட் வடிவ துாக்கு பாலத்தை ஏப்.12ல் பாம்பன் கடற்கரையில் இருந்து பாலம் நடுவில் நகர்த்தி செல்லப்பட்டது.
நேற்று அதிகாலை 12:20 மணிக்கு புதிய பாலம் நடுவில் துாக்கு பாலத்தை பொறியாளர்கள் பொருத்தினர். அப்போது 4 மாத போராட்டத்திற்கு பின் துாக்கு பாலத்தை பொருத்திய மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக வானில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கையுடன் கொண்டாடினர்.
இதன்பின் தொழில்நுட்பத்துடன் துாக்கு பாலத்தை பொருத்தும் பணி இன்னும் 15 நாட்களுக்குள் முடிவடையும்.
இதன் தொடர்ச்சியாக பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்திய பின் அக்.1 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்போக்குவரத்து துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.