'அமைச்சர் பதவியில் தொடர எவ்வித உரிமையும் இல்லை'
'அமைச்சர் பதவியில் தொடர எவ்வித உரிமையும் இல்லை'
'அமைச்சர் பதவியில் தொடர எவ்வித உரிமையும் இல்லை'
ADDED : மார் 25, 2025 04:22 AM
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பண மோசடி செய்த வழக்கில், ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கிடைப்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமினில் வெளியே வந்ததும் உடனே அமைச்சர் பதவியேற்றார்.
இதை கண்டித்து, அதற்கு விளக்கம் கொடுக்கும்படி, அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவகாசம் முடிந்தும், அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கூறிய குற்றச்சாட்டுகளை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தன் அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்து கொண்டிருக்கிறார்.
ஜாமின் கிடைப்பதற்காக பொய் சொல்லி, உச்ச நீதிமன்றத்தையே ஏமாற்றியவர், அமைச்சர் பதவியில் தொடர எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. உடனே, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து, முதல்வர் நீக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.