பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ., சோதனை; தஞ்சாவூரில் இருவர் கைது
பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ., சோதனை; தஞ்சாவூரில் இருவர் கைது
பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ., சோதனை; தஞ்சாவூரில் இருவர் கைது
UPDATED : ஜூன் 30, 2024 05:52 PM
ADDED : ஜூன் 30, 2024 08:35 AM

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு படையினர் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் சாலிமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் ரகுமான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. அல்உம்மா என்ற பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த ரெய்டு நடக்கிறது.
தஞ்சாவூரில் 5 இடங்களில் ரெய்டு
ஹிஸ்புத் தஹிர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக கருதி தேசிய புலனாய்வு அமைப்பினர் தஞ்சாவூரில் 5 இடங்களில் ரெய்டு நடக்கிறது. குழந்தையம்மாள் நகரில் அகமது என்பவர் வீட்டில் இன்று (ஜூன் 30) காலை 6 மணியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பின் டிஎஸ்பி ராஜன் தலைமையில் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும். சாலியமங்கலத்தில் அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட மூவரது வீட்டிலும் சோதனை நடைபெற இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து இடங்களில் இன்று காலை ஆறு மணி முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இருவர் கைது
சாலிமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் ரகுமான் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் மீதும் உபா சட்டத்தின் கீழ், என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.