ADDED : மே 22, 2025 01:27 AM
ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், நடப்பாண்டு முதல் கிராமப்புற இளைஞர்களுக்கு, மொபைல் போன் பழுது நீக்குதல், வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல் உட்பட, 10 தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதன் வாயிலாக, 37,000 கிராமப்புற இளைஞர்கள், வேலை வாய்ப்பு பெறுவர். இதற்காக 30.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.