ADDED : மே 18, 2025 11:08 PM

சென்னை : தேசிய அனல் மின் கழகம் அலுவல் சாரா இயக்குனராக, தமிழக பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., காயத்ரிதேவி நியமிக்கப்பட்டு உள்ளார்.
தேசிய அனல் மின் கழகம், அலுவல் சாரா இயக்குநர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த காயத்ரிதேவி, டில்லியைச் சேர்ந்த அனில்குமார் குப்தா, அரியானாவைச் சேர்ந்த பங்கஜ் குப்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இப்பதவியில் மூன்று ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இருப்பர். காயத்ரிதேவி காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.,வுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


