Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டெல்டாக்காரன் என முதல்வர் கூறுவது உண்மை எனில் விவசாயிகள் நலன் காத்திடுங்கள்: நயினார் நாகேந்திரன் கோரிக்கை

டெல்டாக்காரன் என முதல்வர் கூறுவது உண்மை எனில் விவசாயிகள் நலன் காத்திடுங்கள்: நயினார் நாகேந்திரன் கோரிக்கை

டெல்டாக்காரன் என முதல்வர் கூறுவது உண்மை எனில் விவசாயிகள் நலன் காத்திடுங்கள்: நயினார் நாகேந்திரன் கோரிக்கை

டெல்டாக்காரன் என முதல்வர் கூறுவது உண்மை எனில் விவசாயிகள் நலன் காத்திடுங்கள்: நயினார் நாகேந்திரன் கோரிக்கை

Latest Tamil News
சென்னை; டெல்டாக்காரன் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது உண்மை எனில் நெல் கொள்முதல் செய்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது. மாவட்டம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்புடையதல்ல.

பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை. அதை விடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

எனவே, 'டெல்டாக்காரன்' என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் கொள்வது எள் அளவாவது உண்மையென்றால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திடுங்கள்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us