அரசு சம்பளத்தில் கட்சி பேனர் வைக்கும் பேரூராட்சி ஊழியர்கள்: மக்கள் அதிருப்தி
அரசு சம்பளத்தில் கட்சி பேனர் வைக்கும் பேரூராட்சி ஊழியர்கள்: மக்கள் அதிருப்தி
அரசு சம்பளத்தில் கட்சி பேனர் வைக்கும் பேரூராட்சி ஊழியர்கள்: மக்கள் அதிருப்தி
ADDED : பிப் 28, 2025 12:49 PM

கோவை: முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை, தாளியூர் பேரூராட்சி ஊழியர்கள் தி.மு.க., பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினின் நாளை 72 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத தமிழகம் முழுதும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்களை வைத்து வருகின்றனர்.
கோவை, தாளியூர் பேரூராட்சி பகுதியில் தி.மு.க.,வினர் பேனர் தயார் செய்துள்ளனர். ஆனால் அதனை, பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் வைத்து வருகின்றனர். இதற்கு பேரூராட்சி செயல் அலுவலரும் உத்தரவிட்டு உள்ளது தெரியவந்துள்ளது. பேனர் வைப்பதால், தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள பொது மக்கள், சம்பந்தப்பட்ட செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.