'மிஸ்டர் பெஞ்ச்' சாம்பியன்ஷிப் கெருகம்பாக்கம் வீரருக்கு தங்கம்
'மிஸ்டர் பெஞ்ச்' சாம்பியன்ஷிப் கெருகம்பாக்கம் வீரருக்கு தங்கம்
'மிஸ்டர் பெஞ்ச்' சாம்பியன்ஷிப் கெருகம்பாக்கம் வீரருக்கு தங்கம்
ADDED : ஜூலை 02, 2025 12:30 AM

சென்னை, மாவட்ட அளவிலான 'மிஸ்டர் பெஞ்ச்' சாம்பியன்ஷிப் போட்டியில், கெருகம்பாக்கம் வீரர் தங்கம் வென்றார்.
சென்னை மாவட்ட பளு துாக்கும் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான 'மிஸ்டர் பெஞ்ச் - 2025' என்ற தலைப்பில், பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஓட்டேரியில் நடந்தது.
இதில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் பெண்கள் என, ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு எடைகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், போரூர் அடுத்து கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.மனிஷ் முகுந்தன், ஜூனியர் '120 பிளஸ்' எடை பிரிவில் பங்கேற்று, 110 கிலோ எடை துாக்கி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். இதேபோல், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனையருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.