விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமழை!: இன்று மாலையுடன் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமழை!: இன்று மாலையுடன் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமழை!: இன்று மாலையுடன் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்

15 அமைச்சர்கள்
இந்த தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்ததால், தி.மு.க, - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி என, மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும், தி.மு.க., - பா.ம.க., இடையே தான் கடும் மோதல் உள்ளது. ஆளும் தி.மு.க., தரப்பில் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, நேரு, பன்னீர்செல்வம் உட்பட 15 அமைச்சர்கள், 30 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள், விக்கிரவாண்டி, காணை, கோலியனுார் ஒன்றியங்களில் முகாமிட்டு, ஆளுக்கு ஐந்து கிராமங்களை பிரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுஉள்ளனர்.
ஏன் தடுக்கிறீர்கள்?
இறுதிக்கட்டமாக, கடைசி இரு நாட்களில் ஆளும் தரப்பு, ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுத்து இறுதி செய்யவும், வேட்டி, புடவை, கம்மல், மூக்குத்தி என ஆபரணங்களை வழங்கவும், சில அமைச்சர்கள் தரப்பில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில், 10 நாட்களாக பெரும்பாலான கிராமப்புற மக்கள், வெளியில் வேலைக்கு செல்லாமல், தினமும் பிரசாரம், கவனிப்பு என 2,000 முதல் 3,000 ரூபாய் வரை கிடைப்பதை வாங்கி வருகின்றனர். தாராளமாக பணம் புழங்குவதால் ஆண்கள், டாஸ்மாக் மற்றும் ஹோட்டல்களில் குதுாகலமாக பொழுதை கழிக்கின்றனர். அதேசமயம், விவசாய வேலைக்கு ஆள் வரவில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். தேர்தல் பிரசாரம் மற்றும் 'கவனிப்பு' சூடு பிடித்துள்ளதால், விக்கிரவாண்டி தொகுதியில், மொத்தமுள்ள 39 டாஸ்மாக் கடைகளில், தினசரி விற்பனை 1.20 கோடியிலிருந்து, 3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவரை மூன்று கட்ட கவனிப்புகள் நடந்துஉள்ளதால், வாக்காளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.