ADDED : செப் 09, 2025 05:29 AM

தமிழகம் பாதுகாப்பான பூமியாக இருக்கிறது என நாம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது. காரணம், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. போதை பொருள் புழக்கம் மிக அதிகமாகி விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; படுகொலைகள் அதிகம் நடக்கின்றன. தி.மு.க., ஆட்சி நிறையும், குறையும் கலந்தது. மக்கள்நல கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அதனாலேயே, மூன்றாவது அணி முயற்சி தோற்றது. தங்கம் விலை றெக்கை கட்டி பறக்கிறது. தங்கத்தை நினைக்கவே பயமாக உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வரி மேல் வரி போட்டு இந்தியாவை மிரட்டினார். ஆனால், பிரதமர் மோடி, சீனா, ஜப்பான் உடன் நெருக்கம் காட்டி, டிரம்ப்பையே மிரள வைத்துள்ளார். அவருடைய நிலைப்பாடு பாராட்டுக்குரியது.
பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,