பொருளாதார முதுகெலும்பான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்
பொருளாதார முதுகெலும்பான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்
பொருளாதார முதுகெலும்பான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்

வரையறை என்ன?
இயந்திர முதலீடு மற்றும் ஆண்டு வர்த்தக அடிப்படையில், மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வகைப்படுத்துகிறது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல், இந்த வகைப்பாட்டில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் வரை முதலீடும், 10 கோடி வரை ஆண்டு வர்த்தகம் உள்ளவை, குறு நிறுவனங்கள்; 50 கோடி வரை முதலீடும், 100 கோடி வரை வர்த்தகம் மேற்கொள்பவை சிறு நிறுவனங்கள்; 100 கோடி வரை முதலீடும், 500 கோடி வரை வர்த்தகம் மேற்கொள்பவை நடுத்தர நிறுவனங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
என்னென்ன திட்டங்கள்?
l மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்க மானியம் வழங்கிவருகிறது. அதிகபட்சம், 10 கோடி ரூபாய் முதலீட்டில் பொது பயன்பாட்டு மையங்கள் அமைக்கலாம். மொத்த திட்ட மதிப்பீட்டில், 70 சதவீதம் மத்திய அரசு, 20 சதவீதம் மாநில அரசு என, பொது பயன்பாட்டு மையம் அமைக்க, 90 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. குழும நிறுவனங்கள் வெறும் பத்து சதவீத பங்களிப்பு தொகை செலுத்தினால் போதுமானது.
கிளஸ்டர் மேம்பாடு
l தமிழக அரசு, புதிதாக துவங்கப்படும் நிறுவனங்களுக்கு, 25 சதவீதம் மூலதன மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு, 25 சதவீதம் மின் கட்டண மானியம் வழங்குகிறது. மத்திய அரசு போலவே, மாநில அரசும், சிறிய அளவிலான கிளஸ்டர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.