மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல தி.மு.க., அரசு மீது மார்க்சிஸ்ட் விமர்சனம்
மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல தி.மு.க., அரசு மீது மார்க்சிஸ்ட் விமர்சனம்
மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல தி.மு.க., அரசு மீது மார்க்சிஸ்ட் விமர்சனம்
ADDED : ஜூன் 08, 2025 03:11 AM
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலர் சண்முகம் அறிக்கை:
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, தனியார் பள்ளிகளுக்கு, தமிழக அரசு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது. இவ்வாண்டு தமிழகம் முழுதும் 1.75 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், தனியார் பள்ளி நிர்வாகங்கள், தங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகையை காரணம் காட்டி, மாணவர் சேர்க்கையை மறுக்கின்றன. பள்ளிகள் திறந்து, ஒரு வாரமாகியும் இப்பிரச்னை தீர்க்கப்படவில்லை.
சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ், தமிழக அரசுக்கு தர வேண்டிய, 2,152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுத்து வருகிறது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தையே முடமாக்கும் வகையில், நிதியை மாநிலங்களுக்கு வழங்காமல் இருக்கிறது. நிதி நெருக்கடியால் தமிழகத்தில், 7 லட்சம் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து நிதி தாமதமாவதைக் காரணம் காட்டி, 25 சதவீத மாணவர் சேர்க்கையை, தமிழக அரசு மறுப்பது நியாயமல்ல. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இப்பிரச்னையில் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.