Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

ADDED : ஜன 03, 2024 06:49 PM


Google News
Latest Tamil News
திருப்பாவை - பாடல் 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்

பொருள்: ''குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் துாக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படி செய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

திருவெம்பாவை - பாடல் 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்றுஅங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்கஎம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்ககங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்கஇங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்

பொருள்: 'உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள்' என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது செய்யும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன்னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன?.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us