ஓடும் ரயிலில் மொபைல் போன்கள் திருடியவர் கைது
ஓடும் ரயிலில் மொபைல் போன்கள் திருடியவர் கைது
ஓடும் ரயிலில் மொபைல் போன்கள் திருடியவர் கைது
ADDED : செப் 01, 2025 06:31 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், ஓடும் ரயிலிலில் மொபைல் போன்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, துரைப்பாக்கத்தை சேர்ந்த சசிக்குமார் மகள் கோமதி, 36; இவர், கடந்த 29 ம் தேதி இரவு தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்ல உழவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். அப்போது சார்ஜ் போட்டிருந்த அவரது மொபைல் போன் திருடு போனது.
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை,30; இவர், நேற்று முன்தினம் காலை விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயிலில் பயணித்தார். அப்போது அவரது மொபைல் போன் திருடு போனது. இருவரும் விழுப்புரம் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இதையடுத்து மொபைல் திருட்டில் ஈடுபட்ட, சையத் அலி மகன் அர்பான், 24; என்பவரை கைது செய்தனர். இவர், கேரளா மாநிலம் இஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர். தற்போது திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் கிராமத்தில் வசித்து, திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திருட்டு வழக்குகள் உள்ளது. அவரை போலீசார் கைது செய்து, இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.