தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி
ADDED : ஜூன் 06, 2025 09:58 AM

பாலக்கோடு: தருமபுரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மலையாள நடிகரின் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஷன் டாம் சாக்கோ. இவர், கேரளாவை இருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
தருமபுரியின் பாலக்கோடை அடுத்த பாறையூர் அருகில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும், நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் படுகாயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் டாம் சாக்கோ அண்மையில் போதைப் பொருளை பயன்படுத்தி, நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.