'மாப்பிள்ளை எங்களதுங்க... சட்டை உங்களதுங்க...'
'மாப்பிள்ளை எங்களதுங்க... சட்டை உங்களதுங்க...'
'மாப்பிள்ளை எங்களதுங்க... சட்டை உங்களதுங்க...'
UPDATED : ஜன 31, 2024 01:13 PM
ADDED : ஜன 31, 2024 02:18 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் துவக்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் வர மாட்டார்,” என, பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டசபை தொகுதியில் நேற்று நடந்த பாதயாத்திரையில் பங்கேற்ற பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தின் முக்கியமான பிரச்னை, தரமான கல்வி கிடைக்கவில்லை. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரமில்லாமல் இருக்கின்றன. தனியார் பள்ளிகளில் கிடைக்கும் கற்றல் திறன், அரசு பள்ளிகளில் கிடைப்பதில்லை. அரசு பள்ளியை பொறுத்தவரை, தமிழகத்தில் மூடு விழா நடத்தி கொண்டிருக்கிறது.
'நவோதயா' பள்ளிகள் மூலம், பணம் வாங்காமல், உலகத்தரம் வாய்ந்த கல்வியை, மோடி இலவசமாக கொடுக்க நினைக்கிறார். இந்தியா முழுதும் நவோதயா பள்ளிகள் உள்ளன. தற்போதுள்ள ஆட்சியாளர்கள், தமிழகத்திற்குள் நவோதயா பள்ளிகள் வராமல் தடுக்கின்றனர்.
2024 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, பட்டி தொட்டி எல்லாம் பள்ளிகள் கொண்டு வருவது தான் நம் முதல் வேலையாக இருக்கும்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 31 மாதங்கள் ஆகின்றன. இதில், இரண்டு முறை முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலை வந்தார். ஜூலை, 2022ல் அருணை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு, மீண்டும், அக்., 2023ல் அதே மருத்துவக் கல்லுாரியின் புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கும் வந்தார்.
திருவண்ணாமலைகயில் அமைச்சர் வேலு ஏதாவது கட்டடம் கட்டினால், முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்ட வருவார். ஏழை மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்த வர மாட்டார்.
இந்தியாவில் எங்கும் நடக்காத அநியாயம் இங்கு நடக்கிறது. விவசாய நிலத்தை 'சிப்காட்'டிற்கு கொடுக்க மாட்டேன், பயிர் விளைய கூடிய பூமி, விவசாயம் செய்யப் போகிறேன் என நியாயமாக போராடிய விவசாயி மீது, 'குண்டாஸ்' போடக்கூடிய ஒரு மோசமான ஆட்சி.
திருவண்ணாமலையில், யார் வேட்பாளர்களாக நின்றாலும், மோடி தான் வேட்பாளர் என நினைத்து, ஓட்டளிக்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு, முதல்வர் ஸ்டாலின், 6,000 ரூபாய் கொடுத்தார் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்பணம், 6,000 ரூபாயும் மத்திய அரசின் பணம். ஆனால், பணத்தை கொடுத்த, 2 ரூபாய் கவர் மட்டும், தி.மு.க., அரசுடையது. தி.மு.க., அரசை ஒரே வார்த்தையில் கூற வேண்டுமென்றால், 'மாப்பிள்ளை எங்களதுங்க... சட்டை உங்களதுங்க...' என கூற முடியும்,''
இவ்வாறு பேசினார்.