மின்னல் தாக்கி பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து
மின்னல் தாக்கி பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து
மின்னல் தாக்கி பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து
ADDED : ஜூன் 03, 2024 01:58 AM

திருவண்ணாமலையில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது இரவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இரவு சுமார் 10.45 மணி அளவில் இருந்து திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மாட வீதியில் காந்தி சிலை அருகே உள்ள ஒரு பைப் கம்பெனியின் கடையின் மீது இடி விழுவதாக கூறப்படுகிறது இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மழை மழை என பரவி அருகில் உள்ள சில்லறை விற்பனை பிளாஸ்டிக் பொருட்கள் கடையிலும் பரவியது. இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தீயினால் அந்தப் பகுதியில் சுற்றுவட்டார பகுதி அனைத்திலும் கரும்புகை கிளம்பியது இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் பலர் அங்கு திரண்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் தீ அணைக்கும் பணி அதிகாலை 2 மணிக்கு மேல் வரை தொடர்ந்து நீடித்தது.