Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இனி மருத்துவ சான்றிதழ் இருந்தால் தான் லைசென்ஸ்: '40 பிளஸ்'க்கு புது உத்தரவு

இனி மருத்துவ சான்றிதழ் இருந்தால் தான் லைசென்ஸ்: '40 பிளஸ்'க்கு புது உத்தரவு

இனி மருத்துவ சான்றிதழ் இருந்தால் தான் லைசென்ஸ்: '40 பிளஸ்'க்கு புது உத்தரவு

இனி மருத்துவ சான்றிதழ் இருந்தால் தான் லைசென்ஸ்: '40 பிளஸ்'க்கு புது உத்தரவு

UPDATED : ஜூன் 10, 2024 02:54 PMADDED : ஜூன் 10, 2024 01:08 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே, புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ இயலும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய மோட்டார் வாகன விதி எண் 5-ன் படி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ இயலும்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்னணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும் தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை (ஜூன் 11) காலை 11 மணியளவில் மாநிலம் முழுவதும் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us