ADDED : ஜூன் 12, 2025 03:32 AM
அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்த அனைத்து திட்டத்தையும் ஸ்டாலின் முடித்து வைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் இரு அமைச்சர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருந்து என்ன பயன்? தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப், இலவச ஆடு, மாடுகள் வழங்குதல், காவேரி - குண்டாறு - வைகை இணைப்பு போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
எம்.ஜி.ஆர்., படுத்துக்கொண்டே தானும் ஜெயித்து, 200 தொகுதிகளுக்கும் மேல் வென்றெடுத்தார். மேகம் கருத்தால் சூரியனை மறைக்கும்; இலை துளிர்க்கும். அ.தி.மு.க., ஆட்சி வர வேண்டும், என மக்கள் எதிர்பார்கின்றனர்.
அடுத்த ஆண்டு, மே மாதம் அ.தி.மு.க., ஆட்சி அமையும். அப்போது, இதே மேடையில், நாம் வேற லெவலில் உட்கார்ந்திருப்போம். அ.தி.மு.க., சாகாவரம் பெற்ற கட்சி.
- விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,