அரசியல்வாதிகளுக்கு வேலையில்லை; சீமானுக்கு கனிமொழி பதிலடி
அரசியல்வாதிகளுக்கு வேலையில்லை; சீமானுக்கு கனிமொழி பதிலடி
அரசியல்வாதிகளுக்கு வேலையில்லை; சீமானுக்கு கனிமொழி பதிலடி
ADDED : ஜூன் 16, 2025 03:35 AM

துாத்துக்குடி : திருச்செந்துார் கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் என சீமான் கூறிவரும் நிலையில், ''அரசியல்வாதிகள் அதை முடிவு செய்யக் கூடாது,'' என கனிமொழி எம்.பி., கருத்து தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரச்னை
துாத்துக்குடியில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., அளித்த பேட்டி:
உலகம் முழுதும் பல நாடுகளுக்கிடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதனால், போருக்கான சூழல் உள்ளது. உலக நாடுகள் தலையிட்டு, இப்பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.
நம்முடைய நாட்டுக்கு பயங்கரவாதிகளால் இருக்கும் பாதிப்புகள் குறித்து, உலக நாடுகளுக்கு நம்முடைய எம்.பி.,க்கள் குழு எடுத்துரைத்தது. அதை பல நாட்டு தலைவர்களும் புரிந்து கொண்டனர். இந்தியாவுக்கு உதவுவதாக கூறி உள்ளனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என கூறும் சீமான், தேவையில்லாமல் என்னை சீண்டுகிறார்.
தடுக்க மாட்டார்கள்
கும்பாபிஷேகம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை ஹிந்து அறநிலையத் துறையும் பக்தர்களும் முடிவெடுத்துக் கொள்ளட்டும். இதில் அரசியல்வாதிகளுக்கு வேலை இல்லை.
தமிழில் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என யாரும் சொல்லவில்லை. தமிழ் கடவுள் முருகனுக்கு, தமிழில் கும்பாபிஷேகம் நடத்த யாரும் தடுக்க மாட்டார்கள்.
யாரெல்லாம் தமிழகத்தில் வலு இல்லாமல் இருக்கின்றனரோ, அவர்களெல்லாம் தங்களை வலுவடைய செய்வதற்காக, மதத்தை கையில் எடுத்து செயல்பட முனைகின்றனர்.
தங்களுக்கு அடையாளம் தேட, மதத்தையும் கோவிலையும் பயன்படுத்துகின்றனர். எல்லா விஷயத்திலும் அரசியல் செய்து பிரபலம் அடைய முயல்வதை, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.