Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ எம்.பி., பதவி மூலம் தி.மு.க.,வின் பின்னால் ஒளிந்து கொள்ளும் கமல்; வானதி விமர்சனம்

எம்.பி., பதவி மூலம் தி.மு.க.,வின் பின்னால் ஒளிந்து கொள்ளும் கமல்; வானதி விமர்சனம்

எம்.பி., பதவி மூலம் தி.மு.க.,வின் பின்னால் ஒளிந்து கொள்ளும் கமல்; வானதி விமர்சனம்

எம்.பி., பதவி மூலம் தி.மு.க.,வின் பின்னால் ஒளிந்து கொள்ளும் கமல்; வானதி விமர்சனம்

ADDED : ஜூன் 01, 2025 10:57 AM


Google News
Latest Tamil News
கோவை: ராஜ்யசபா எம்.பி., பதவி தி.மு.க.,வின் பின்னால் கமல் ஒளிந்து இருப்பதுயே காட்டுவதாக கோவை பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இன்று நலம் இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். பிறகு முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக வீடு, வீடாக பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினார்.

அதன் பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது :- மதுரையில் வருகிற 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் முருக கோவில்கள் இருக்கும் இடங்களில் அரசு சார்பில் செய்யப்படும் இடையூறுகள் இளைஞர்கள் குறித்து மக்களிடம் மாநாட்டிற்கு அழைப்பு விடுகிறோம்.

இந்த மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் மாநாடாக இருக்கும். அவர்கள் மன வேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக இருக்கும். நடிகர் கமலஹாசன் 2 தேர்தல்களில் அவருக்கு வாக்கு அளித்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டு ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக சென்று விட்டார். அவர் பேசிய வசனங்கள் எல்லாம் சினிமா ஷூட்டிங்கில் கேமரா வந்து பேசி விட்டு மறந்து விடுவது போல வாழ்க்கையிலும் நடந்து வருகிறார். எப்படியாவது ? பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சுய நலத்தோடு தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம் செய்து உள்ளார். மக்கள் ஆதரவை பெற்று வெற்றி பெற முடியாமல், தி.மு.க.,வினர் பின்னால் ஒளிந்து இந்த பதவியை அவர் பெற்று உள்ளார்.

மதுரையில் முதல்வர் ஸ்டாலினும், அவரது அண்ணன் அழகிரியும் சந்தித்து பேசியது குறித்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அண்ணன், தம்பிகள் பிரிவது, சேர்வது என்பது இயல்பு. அதே நேரத்தில் மதுரையில் முதல்வர் பார்வையிட சென்ற போது அங்கு துணிகளை போட்டு மூடி வைத்து இருந்த சம்பவம் தவறானது. கோவையிலும் பல இடங்களை குப்பைகளை இதுபோன்று தான் மறைத்து வைத்து வருகிறார்கள்.

வட மாநிலங்களில் தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை மனம் திரும்பச் செய்து வருகிறார்கள். இதனால் தீவிரவாதம் குறைந்து உள்ளது. ஆனால் இங்கு அவர்களுக்கு ஆதரவாக முன்னணி அரசியல் தலைவர்களே செல்வது தவறானது. மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களை பல்லாயிரம் கோடி ஒதுக்கி செய்து உள்ளது. இதை பிரதமரே ராமேஸ்வரம் கூட்டத்தில் பேசி உள்ளார். எனவே இதைப் பற்றி குறை கூறுபவர்களை ஒன்றும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us