ADDED : மார் 23, 2025 01:43 AM

சென்னை: தமிழகத்தில், 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
அந்த வகையில், தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதற்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது.
கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசித்துள்ளனர். கூட்டத்தில் கமல் பேசும் போது, 'சட்டசபை தேர்தல் வருவதால், அனைத்து நிர்வாகிகளும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
'தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தேர்தலை சந்திக்க, தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற தயாராக வேண்டும்' எனக் கூறியதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.