கச்சத்தீவு திருவிழா: நாட்டுப்படகுகளில் 300 மீனவர்கள் பயணம்
கச்சத்தீவு திருவிழா: நாட்டுப்படகுகளில் 300 மீனவர்கள் பயணம்
கச்சத்தீவு திருவிழா: நாட்டுப்படகுகளில் 300 மீனவர்கள் பயணம்
ADDED : ஜன 28, 2024 11:38 PM

ராமநாதபுரம் : கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு 20 நாட்டுப்படகுகளில் பாரம்பரிய மீனவர்கள் 300 பேர் பயணிக்க திட்டமிட்டுள்ளனர்.
கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா பிப். 23,24ல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பாம்பனில் பாரம்பரிய மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தலைவர் ராயப்பன் தலைமை வகித்தார். தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சின்னத்தம்பி கூறியதாவது: கச்சத்தீவு திருவிழா கொண்டாட மத்திய அரசு இலங்கைக்கு ரூ.3 கோடி ஊக்கத் தொகையாக வழங்குகிறது. தமிழக அரசு அங்கு செல்ல நாட்டுப்படகுகளுக்கு தலா 100 லிட்டர் டீசல் வழங்க வேண்டும். கச்சத்தீவு சம்பந்தமாக 2018ல் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புபடி நாட்டுப்படகுகள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்க வேண்டும்.
இது தொடர்பாக பயணக்குழு சார்பில் ஜன.31ல் கலெக்டரை சந்தித்து நாட்டுப்படகு விபரங்களை வழங்கி உரிமை கோர உள்ளோம். பிப்.5க்குள் அங்கு செல்லும் பயணிகள் விபரத்தினை எங்கள் குழுவிடம் ஒப்படைக்கவேண்டும். 20 நாட்டுப்படகுகளில் 300 பேர் பயணிக்க உள்ளோம் என்றார்.---------