Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஜூன் 15 முதல் 19ம் தேதி வரை பா.ம.க., பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு

ஜூன் 15 முதல் 19ம் தேதி வரை பா.ம.க., பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு

ஜூன் 15 முதல் 19ம் தேதி வரை பா.ம.க., பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு

ஜூன் 15 முதல் 19ம் தேதி வரை பா.ம.க., பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு

UPDATED : ஜூன் 10, 2025 05:25 PMADDED : ஜூன் 10, 2025 05:23 PM


Google News
Latest Tamil News
சென்னை: ராமதாசுடன் ஒரு பக்கம் மோதல், நிர்வாகிகள் நீக்கம் போன்ற சிக்கல்களுக்கு இடையே பா.ம.க.,வின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவானது, முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெறும் என்று கூறி உள்ளார். இதுகுறித்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக அன்புமணி வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு;

பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது.

முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

1. 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்

2. 15.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்

3. 16.06.2025 திங்கள் காலை 10.00 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்

4. 16.06.2025 திங்கள் மாலை 03.00 மணி -ராணிப்பேட்டை மாவட்டம்

5. 17.06.2025 செவ்வாய் காலை 10.00 மணி - வேலூர் மாவட்டம்

6. 17.06.2025 செவ்வாய் மாலை 03.00 மணி -திருப்பத்தூர் மாவட்டம்

7. 18.06.2025 புதன் காலை 10.00 மணி - திருவண்ணாமலை மாவட்டம்

8. 18.06.2025 புதன் மாலை 03.00 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம்

9. 19.06.2025 வியாழன் காலை 10.00 மணி -சேலம் மாவட்டம்

10. 19.06.2025 வியாழன் மாலை 03.00 மணி -தர்மபுரி மாவட்டம்

மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.

சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அறிவிப்பை அன்புமணி வெளியிட்டுள்ளார். அவரின் அறிவிப்பானது கட்சியின் லெட்டர் பேடில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் என்றும், தலைவர் அன்புமணி என்றும் இடம்பெற்றுள்ளதோடு, பா.ம.க.வின் தலைமை நிலைய அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு இருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us