சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
சிவகாசி அரசு பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி!
ADDED : ஜூன் 10, 2025 07:57 AM

சிவகாசி: சிவகாசி அரசு பள்ளியில் மகள் அன்பிற்கினியாளை இரண்டாம் வகுப்பில் நீதிபதி விஜயபாரதி சேர்த்துள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்தவர் விஜயபாரதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இடம் மாற்றப்பட்டு, சிவகாசி நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியில் சேர்ந்துள்ளார். இவரது மனைவி கங்கா, விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.
இவர்கள், தங்கள் மகள் அன்பிற்கினியாள், 7, என்பவரை விஸ்வநத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். தலைமை ஆசிரியர் தனபால், உதவி ஆசிரியர் முருகன் விண்ணப்ப படிவத்தை கொடுத்து பள்ளியில் சேர்த்தனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'நீதிபதியின் மகளை அரசு பள்ளியில் சேர்த்தது பிற பெற்றோர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்' என்றனர்.