Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முதல்வர் அறிவிப்பு வெளியிட ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தல்

முதல்வர் அறிவிப்பு வெளியிட ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தல்

முதல்வர் அறிவிப்பு வெளியிட ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தல்

முதல்வர் அறிவிப்பு வெளியிட ஜாக்டோ - ஜியோ வலியுறுத்தல்

ADDED : பிப் 25, 2024 01:12 AM


Google News
சென்னை:'தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் தொடர்பான, தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கொள்கை முடிவை, முதல்வர் அறிவிக்க வேண்டும்' என, ஜாக்டோ - ஜியோ வலியுறுத்திஉள்ளது.

ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம்,சென்னையில் நடந்தது.

சந்தேகம் இல்லை


கூட்டத்தின் முடிவில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கை:

நாம் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும், நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களே என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.

காத்திருங்கள் கொடுக்கிறோம் என தெரிவிக்கும் இடத்தில், முடியாது நாங்கள் போராடியே தீருவோம் என்ற எதிர்பாடான நிலை எடுத்து, போராட்டத்தை தொடர்வது முறையாக இருக்காது.

தமிழக அரசியல் கட்சிகளில், தி.மு.க.,வை தவிர வேறு எந்த கட்சியும், நமக்கான உரிமைகளை நிறைவேற்றித் தருவோம் என ஒரு பேச்சுக்கு கூட கூறாத நிலையில், 'காத்திருங்கள்... நான் செய்யாமல் உங்களுக்கு யார் செய்யப்போகின்றனர்' என்று கூறும் முதல்வரின் அறிவிப்பை எதிர்த்து, நாம் போராட்ட களம் செல்வது, நமக்காக திறந்திருக்கும் வாய்ப்பு வாசல்களை, நாமே அடைந்து விட்டதாக ஆகிவிடும்.

மிகுந்த யோசனைகளுக்கு பிறகே, முதல்வரின் நம்பிக்கை வார்த்தைகளை ஏற்று, சில கோரிக்கைகளாவது கூடிய விரைவில் நிறைவேறும் எனற நம்பிக்கை அடிப்படையில், போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால், எந்தவித அறிவிப்பும் இல்லாமல், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்திருக்கிறது.

தள்ளி வைப்போம்


கூடிய விரைவில், பட்ஜெட் கூட்டத்தொடர் வரக்கூடிய நிலையில், கடைசியாக ஒரு முறை நம்முடைய போராட்டத்தை, தற்காலிகமாக தள்ளி வைப்போம்.

கொடுத்த வாக்குறுதிகள் நீர்த்து போனால், மீண்டும் போராட்டத்தை தொடரும் நிலைப்பாட்டில், ஒற்றுமையாக உறுதியாக இருப்போம்.

லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் குறித்தான, தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து, முதல்வர் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us