ADDED : ஜூன் 07, 2025 04:07 AM

நான் ஏற்கனவே தே.மு.தி.க.,வில் ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்திருக்கிறேன். அதன் பின், ஒன்பது ஆண்டுகள் எந்த பொறுப்பிலும் இல்லாமல் இருந்திருக்கிறேன். இறையருளால் மீண்டும் எம்.எல்.ஏ.,வாகி இருக்கிறேன்; சத்தமில்லாமல் மக்கள் பணி செய்து வருகிறேன்.
ஆனாலும், என் பெயரைக்கூட பத்திரிகைகளில் போடுவதில்லை. பெயர் வராதது வருத்தம் தான். இருந்தபோதும், என் பெயர் போட்டுத்தான், இனி நான் வளர வேண்டும் என்பதில்லை. என் ஆதங்கத்தை வெளிப்படுத்தவே இப்படி பேசுகிறேன். நான் எம்.எல்.ஏ., ஆனது தலைவர் ஸ்டாலினால் தானே தவிர, என்னாலோ, மற்றவர்களாலோ இல்லை.
- சந்திரகுமார், தி.மு.க., - எம்.எல்.ஏ.,