'எல்லாம் நன்மைக்கே': பன்னீர்செல்வம் நம்பிக்கை
'எல்லாம் நன்மைக்கே': பன்னீர்செல்வம் நம்பிக்கை
'எல்லாம் நன்மைக்கே': பன்னீர்செல்வம் நம்பிக்கை
UPDATED : மார் 27, 2025 06:34 AM
ADDED : மார் 26, 2025 06:43 PM
சென்னை:அமித்ஷா - பழனிசாமி சந்திப்பு குறித்த கேள்விக்கு, ''எல்லாம் நன்மைக்கே,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டார். அ.ம.மு.க.,வும் பா.ஜ.,கூட்டணியில் இடம்பெற்றது. அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க, பா.ஜ., முயற்சித்து வந்ததாக கூறப்பட்டது. அதை பழனிசாமி ஏற்கவில்லை.
'பா.ஜ., உடன் இனி கூட்டணியே இல்லை' எனக் கூறி வந்த பழனிசாமி, நேற்று முன்தினம் டில்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி முடிவு செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பன்னீர்செல்வம் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று சட்டசபைக்கு வந்த பன்னீர்செல்வத்திடம், அமித்ஷா - பழனிசாமி சந்திப்பு குறித்து கேட்டதற்கு, ''எல்லாம் நன்மைக்கே,'' என, பதில் அளித்தார். வேறு எதுவும் கூற மறுத்து விட்டார்.
அதேபோல், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடம்பூர் ராஜு, உதயகுமார் போன்றோர், கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டனர்.