பா.ஜ.,வை புரிந்து கொள்வது அ.தி.மு.க.,வுக்கு நல்லது: திருமாமளவன்
பா.ஜ.,வை புரிந்து கொள்வது அ.தி.மு.க.,வுக்கு நல்லது: திருமாமளவன்
பா.ஜ.,வை புரிந்து கொள்வது அ.தி.மு.க.,வுக்கு நல்லது: திருமாமளவன்
UPDATED : செப் 12, 2025 05:49 AM
ADDED : செப் 12, 2025 03:01 AM

அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பத்துக்கு பா.ஜ., தான் காரணம் என்பதை மக்கள் அறிவர். செயல்பட முடியாத அளவுக்கு சசிகலா முடக்கப்பட்டார்; முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறார்; தனிக்கட்சி துவங்கி நடத்துகிறார் தினகரன்.
தற்போது செங்கோட்டையன், அ.தி.மு.க., தலைமைக்கு எதிராக பேசும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளார். இவை அனைத்துக்கும் பா.ஜ., தான் காரணம் என்பதை மக்கள் புரிந்து கொண்டதுபோல், அ.தி.மு.க., முன்னணி தலைவர்களும் புரிந்து கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு திராவிட கட்சியை பலவீனப்படுத்தி விட்டால், பா.ஜ.,வை தமிழகத்தில் வளர்த்து விட முடியும் என நம்புகின்றனர். அதை, அ.தி.மு.க., புரிந்து செயல்படுவது நல்லது.
- திருமாவளவன், தலைவர், வி.சி.,