இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்; இரு நாடுகளும் தன்னை அணுகியதாக டிரம்ப் தம்பட்டம்
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்; இரு நாடுகளும் தன்னை அணுகியதாக டிரம்ப் தம்பட்டம்
இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்; இரு நாடுகளும் தன்னை அணுகியதாக டிரம்ப் தம்பட்டம்

வாஷிங்டன்: இஸ்ரேல் ஈரான் இடையே மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இதற்கு பதிலடியாக நேற்றிரவு(ஜூன் 23) ஈரான் ஏவுகணைகளால் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று(ஜூன் 24) இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை: 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும். சகிப்புத் தன்மை, தைரியம், புத்திசாலித்தனத்தால் இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு வாழ்த்துகள். மத்திய கிழக்கு நாடுகள் ஒருபோதும் அழியாது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மற்றும் உலகை கடவுள் ஆசிர்வதிப்பார். இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் டிரம்ப் கூறியிருப்பதாவது: இஸ்ரேலும் ஈரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் என்னிடம் அமைதியை தேடி வந்தனர். இப்போது தான் நேரம் என்று எனக்குத் தெரியும்.
உலகமும், மத்திய கிழக்கு நாடுகளும்தான் உண்மையான வெற்றியாளர்கள். இரு நாடுகளும் தங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய அன்பு, அமைதி மற்றும் செழிப்பைக் காணும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.