கோவை பட்டீஸ்வரர் கோவில் திருப்பணியில் முறைகேடு?
கோவை பட்டீஸ்வரர் கோவில் திருப்பணியில் முறைகேடு?
கோவை பட்டீஸ்வரர் கோவில் திருப்பணியில் முறைகேடு?
ADDED : ஜன 06, 2024 08:17 PM

சென்னை:'கோவை பட்டீஸ்வரர் கோவில் திருப்பணிகளில் நடக்கும் முறைகேடு குறித்து புகார் அளித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவில்லை' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:
கோவை மாவட்டம் பேரூரில், பட்டீஸ்வரர் கோவில் உள்ளது; அங்கு திருப்பணி நடக்கிறது. கோவிலை சுற்றி, 16 லட்சம் ரூபாயில் மதில் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. ஏற்கனவே உள்ள மதில் சுவர் மண்ணால் கட்டப்பட்டுள்ளது. அதன் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யவில்லை.
யானை தொட்டி அருகே கோசாலை அமைக்கும் பணி நடக்கிறது. மாடுகளுக்கு நோய் தாக்கம் ஏற்படும் என, மருத்துவர் எச்சரித்தும் கோசாலை அமைக்கும் பணி தொடர்கிறது. இதில், முறைகேடு செய்யப்பட்டு, மொத்த ஒதுக்கீட்டில், 8 சதவீதம் வரை, லஞ்சப்பணம் சென்றுள்ளது.
கோவிலில், 50 பேர் அமர்ந்து சாப்பிடும் அன்னதான கூடம் உள்ளது. அது, 100 பேர் அமர்ந்து சாப்பிடும் இடமாக மாற்றப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, 30 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவே கட்டி உள்ளனர்.
கோபுரம் மற்றும் அதில் உள்ள சிலைகளுக்கு, 'பெயின்ட்' அடித்ததிலும் முறைகேடு நடந்துள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பட்டீஸ்வரர் கோவிலில் அறங்காவலரை நியமித்து விட்டால் நேரடியாக அதிகாரிகளால் தலையிட முடியாது. அதற்குள் வாரி சுருட்ட வேண்டும் என்பதற்காக, முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.