முகநுாலில் அவதுாறு; பா.ஜ., நிர்வாகி கைது
முகநுாலில் அவதுாறு; பா.ஜ., நிர்வாகி கைது
முகநுாலில் அவதுாறு; பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : ஜூலை 08, 2024 06:55 AM

தொண்டி: மத அவதுாறு பதிவேற்றம் செய்ததாக கூறி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை பா.ஜ., ஆன்மிக பிரிவு மாநில பொறுப்பாளர் குருஜி, 35, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
தொண்டியைச் சேர்ந்த அகமது பாய்ஸ், 47, என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:
ஹிந்து, முஸ்லிம்கள் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில், குருஜி தன் முகநுால் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து, குருஜி மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க, நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தொண்டி போலீசார் விசாரித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை நேற்று காலை காரைக்காலில் கைது செய்தனர்.