ADDED : மார் 25, 2025 02:48 AM
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழக பல்கலைகளுக்கு, 30 மாதங்களாக புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால், வரும் ஆகஸ்டில், 85 சதவீத பல்கலைகளில் துணை வேந்தர்கள் இல்லாத நிலை உருவாகி விடும்.
துணைவேந்தர்களின் கையெழுத்து இல்லாமல் வழங்கப்பட்டுள்ள சான்றுகளுக்கு மதிப்பு இல்லை என்பதால், மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி பாதிக்கப்பட்டுள்ளது. கவர்னருக்கும்,அரசுக்கும் இடையிலான மோதலில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக் கூடாது. சிக்கலுக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.